துளசி ஸ்தோத்திரம் பாடல் வரிகள்/Tulasi Stothram Song Lyrics.

துளசி ஸ்தோத்திரம் பாடல் வரிகள்.🙏🙏🙏🙏 ===============================.=== மகா விஷ்ணுவிற்கு உகந்த துளசி முன்பு நாம் அனுதினமும் பாட வேண்டிய துளசி ஸ்தோத்திரம் பாடல் வரிகள் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடலை நாம் வாசிக்கும் போது நமக்கு சகல நன்மைகள் விளங்கும்… அஷ்டலக்ஷ்மிகளின் அனுக்கிரஹம் கிடைக்கும்..…. துளசி அம்மன் ஸ்தோத்திரம் பாடல் வரிகள். ஸ்ரீமத் துளசி அம்மா திருவே கல்யாணியம்மா வெள்ளி கிழமை தன்னில் விளங்குகின்ற மாதாவே செவ்வாய்க்கிழமை தன்னில் செழிக்க வந்த செந்துருவே தாயாரே உந்தன் தாளிணையில் நான் பணிந்தேன் (1) பச்சை பசுமையுள்ள துளசி நமஸ்தே பரிமளிக்கும் மூலக்கொழுந்தே நமஸ்தே அற்ப பிறப்பை தவிர்ப்பாய் நமஸ்தே அஷ்ட ஐஸ்வர்யம் அளிப்பாய் நமஸ்தே

(2) ஹரியுடைய தேவி அழகி நமஸ்தே அமைந்தார்க்கு இன்பம் அளிப்பாய் நமஸ்தே வன மாலை என்னும் மருவே நமஸ்தே வைகுண்ட வாசியுடன் மகிழ்வாய் நமஸ்தே

(3) அன்புடனே நல்ல அரும் துளசி கொண்டு வந்து மண்ணின் மேல் நட்டு மகிழ்ந்து நல்ல நீரூற்றி முற்றத்தில் தான் வளர்த்து முத்து போல் கோலமிட்டு செங்காவி சுற்றும் இட்டு திருவிளக்கும் ஏற்றி வைத்து

(4) பழங்களுடன் தேங்காயும் தாம்பூலம் தட்டில் வைத்து புஷ்பங்களை சொரிந்து பூஜித்த பேர்களுக்கு என்ன பலன் என்று ஹ்ருஷிகேஷர் தான் கேட்க மங்களமான துளசி மகிழ்ந்து தானே உரைப்பாள்

(5) மங்களமாய் என்னை வைத்து மகிழ்ந்து உபாஸித்தவர்கள் தீவினையை போக்கி சிறந்த பலன் நான் அளிப்பேன் அரும் பிணியை நீக்கி அஷ்ட ஐஸ்வர்யம் நான் அளிப்பேன் தரித்திரத்தை நீக்கி செல்வத்தை நான் கொடுப்பேன்

(6) புத்திரர் இல்லாதவர்க்கு புத்திர பாக்கியம் நான் அளிப்பேன் கன்னியர்கள் பூஜை செய்தால் நல்ல கணவரை கூட்டுவிப்பேன் க்ரஹஸ்தர்கள் பூஜை செய்தால் கீர்த்தியுடன் வாழ வைப்பேன் பக்தர்கள் பூஜை செய்தால் மோக்ஷ பதம் நான் கொடுப்பேன்

(7) கோடிக் காராம் பசுவை கன்றுடனே கொண்டு வந்து கொம்புக்கு பொன் அமைத்து குளம்புக்கு வெள்ளி கட்டி கங்கை கரை தனிலே கிரகண புண்ய காலத்தில் வாலுருவி அந்தணர்க்கு மகா தானம் செய்த பலன்(😎 நாள் அளிப்பேன் சத்தியம் என்று நாயகியும் சொல்லலுமே அப்படியே ஆகவென்று திருமால் அறிக்கை இட்டார் இப்படியே அன்புடனே ஏற்றி தொழுதவர்கள் அற்புதமாய் வாழ்ந்திடுவார் மாதேவி தன் அருளால்

(8) தாயே ஜகன் மாதா அடியாள் செய்கின்ற பூஜையை ஏற்று கொண்டு அடியார் செய்த சகல பாவங்களையும் மன்னித்து காத்து ரக்ஷித்து கோறும் வரங்களை கொடுத்து அனுக்ரஹம் செய்ய வேண்டும் துளசி மாதாவே. 

 

| Tulasi Stothram Song Lyrics. 🙏🙏🙏🙏
===============================.===
The lyrics of Tulasi stothram which we should sing daily before Maha Vishnu are given in this post... When we play this song, we will understand all the benefits... Anukraham of Ashtalakshmi will be available......
Thulasi Amman Stothram song lyrics.
Srimath Tulasi Amma Thiruve Kalyaniamma
Friday is blowing in itself mother
Senthruve who came to flourish in itself on Tuesday
Mother, I bowed down to your pillow (1)
Green green basil namaste
Namaste to the serving raw fat
Namaste, avoid being a silly birth.
Namaste
(2)Hari's goddess beauty Namaste
Namaste, you will give happiness to those who are in the world.
Namaste to the daughter of the forest garland
Enjoy with Vaikunda Vasi Namaste
(3)Bringing good tulasi with love
Planting on the soil and enjoying a good fountain
Growing up in the courtyard and playing like a pearl
Red saffron spinning and lighting the Thiruvilakkam
(4)Put coconut with fruits and thambulam on a plate
For the people who worshipped the flowers
Only Hrushikeshar asks what is the benefit
Auspicious Tulasi will speak happily
(5)Those who enjoyed me as auspicious
Remove evil and I will provide the best result
I will remove the sickness and give you Ashta Richness
I will remove history and give wealth
(6)I will give the blessing of sons to those who do not have sons
If virgins do pooja I will bring good husband
If the grahastars do pooja I will make them live with keerthi
If devotees worship, I will give Moksha Padham
(7)Kodik caram brought the cow with the calf
Set gold for the horn and tie silver for the pond
During the holy period of eclipse on the shore of Ganges
Benefits of donating great to Valuruvi Andhanar Even the heroine can say that I will give a promise on the day
Thirumal has reported that it is so
Those who prayed with love like this
Goddess will live wonderfully with her grace
(8)The worship performed by the servant of Mother Jagan Mata
Accepting all the sins committed by the servant Forgive and protect and give boons Mother Tulasi, please show mercy.